ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது (eஇற்கும் tஇற்கும் அடுத்து) எழுத்து a ஆகும்.[3] ஆங்கிலம், எசுப்பானியம், பிரான்சியம் ஆகிய மொழிகளின் உரைப்பகுதிகளில் முறையே, 3.68%, 6.22%, 3.95% பயன்படுத்தப்படும் எழுத்து a என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.[4] ஆங்கில மூலத்தையுடைய சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதில்லையாயினும், aardvark, Aaron போன்ற பிறமொழிச் சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதுண்டு.[5]
கணிதத்திலும் அறிவியலிலும்
வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும்.[6] வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் A பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் a சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.[7]
∀ : பேரெழுத்து Aஇன் தலைகீழ் வடிவம், ஏரணத்தில் "எல்லாவற்றுக்கும்" என்பதைக் குறிக்கப் பயன்படும்.[10]
ª : ஒரு வரிசைக் காட்டி.
Æ æ : இலத்தீன் கூட்டெழுத்து AE.
Å å : பல்வேறு எசுக்காண்டினாவிய மொழிகளில் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து.
மேற்கோள்கள்
↑Simpson, J. A. & Weiner, E. S. C. (1989). The Oxford English Dictionary. Oxford, UK: Oxford University Press. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-19-861213-3.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
↑Kyle, McCarter P. (செப்டம்பர் 1974). "The Early Diffusion of the Alphabet". The Biblical Archaeologist37 (3): 54-56.