9/11 க்கு பிந்தைய காலம்செப்டம்பர் 11, 2001 ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிந்தைய காலம், அமெரிக்காவில் அமெரிக்கர் அல்லாதவர்கள் மீதான சந்தேகம் பயங்கரவாதத்தை எதிர்க்கும் அமெரிக்க அரசின் அணுகுமுறையின் முன்னேற்றம் மற்றும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய கடுமையான வெளியுறவுக் கொள்கை போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும். அரசியல் விளைவுகள்
செப்டம்பர் தாக்குதல்கள் அமெரிக்காவின் அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பெருமளவிலான மாற்றங்களுக்கு வழிவகுத்தன. உள்நாட்டின் இருகட்சிகளுக்கும் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷுக்கு துணையாக அணிவகுத்து நாட்டுப்பற்று சட்டம் நிறைவேற துணை நின்றதோடு ஆப்கானிஸ்தான் போருக்கும் ஆதரவு தந்தன. புதிய வலுவான தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சட்டத்தின் பெரும்பகுதி மேற்கத்திய நாடுகளின் நிதியுதவியால் செயல்படுகிறது. 66 நாடுகளில் 9/11, 2001 க்கும் 2011 க்கும் இடைப்பட்ட காலத்தில் 119044 பயங்கரவாத எதிர்ப்புக் கைதுகளும் 35117 குற்றச்சாட்டுகளும் நடந்துள்ளன. முரணாக 9/11 க்கு முந்தைய காலகட்டத்தில் ஆண்டுக்கு சில நூறு தீவிரவாதக் குற்றங்களே இருந்தன. [2] ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர் நீதிக்கான போராக எண்ணமிடப்பட்டு வந்த நிலையில் சமீபத்திய ஆண்டுகளில் அது ஆதரவை இழந்து வருகிறது. 2011 ம் ஆண்டின்படி 60% க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் போரை எதிர்க்கின்றனர்.[3] உள்நாட்டு பாதுகாப்புத் துறைதாக்குதல்களுக்கான பதிலடியாக அமெரிக்க அரசாங்கம் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறையை (DHS) உருவாக்கியது. இதுதுறை அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைத் துறை ஆகும். இது பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதோடு இயற்கைப் பேரழிவுகளின் போதும் பாதுகாக்கும். அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் போர்வீரர்கள் துறைக்கு அடுத்து 184000 பணியாளர்களுடன் இயங்கும் மூன்றாவது பெரிய துறையாக DHS விளங்குகிறது. உள்நாட்டுப் பாதுகாப்புக் கொள்கை உள்நாட்டுப் பாதுகாப்புக் கழகத்தால் வெள்ளை மாளிகையில் ஒருங்கிணைக்கப்பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்புப் பொறுப்புகளுடன் கூடிய ஏனைய துறைகளாவன சுகாதாரம் மற்றும் மனிதச் சேவைத் துறை நீதித்துறை மற்றும் எரிசக்தி துறை ஆகியனவாகும். சமுதாய விளைவுகள்சந்தேகம்அமெரிக்காவில், 9/11 க்கு முன்னர் வெளிநாட்டவர் அல்லது அமெரிக்கக் குடிமக்களின் சில நடவடிக்கைகள் அப்பாவித்தனமானதாக அல்லது விசித்திரமானதாகவே கருதப்பட்டன. ஆனால் தற்போது சந்தேகக் கண்ணோட்டத்துடன் அதிலும் குறிப்பாக அரேபிய முறையிலான உடை மற்றும் நிறத்துடன் கூடியோரின் நடவடிக்கைகள் சந்தேகக் கண்ணோட்டத்துடனே பார்க்கப்படுகின்றன. ஆறு இஸ்லாமிய இமாம்கள் அமெரிக்க விமானத்தில் அது பறப்பதற்கு முன் தொழுகை செய்த போது சந்தேகத்திற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டதாக அமெரிக்க விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவின் அரசு நிறுவனங்களும் காவல் துறையினரும் மக்களை தங்களை சுற்றியுள்ளோரைக் கவனித்து வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளைப் பற்றி தகவல் தெரிவிக்குமாறு அறிவிப்புகள் வைக்கப்பட்டன. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவுரையில் உற்சாகமாக இருங்கள் உங்கள் சூழலைக் கவனிக்கவும் சந்தேகத்திற்குரிய பொருட்கள் அல்லது நடவடிக்கைகளை உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவும் என கூறப்பட்டுள்ளது. [4] பாரபட்ச பின்னடைவுதாக்குதல்களுக்குப் பிறகு அரேபியர்கள் இஸ்லாமியர்கள் சீக்கியர்கள் மற்றும் தெற்காசிய அமெரிக்கர்கள் மற்றும் இந்த இனக்குழுக்களைச் சேர்ந்தவர்க கருதப்பட்டவர்கள் மிரட்டல் கிண்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் போன்ற பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.[5] பாதுக்கப்பு குறித்த அக்கறைசில அமெரிக்கர்கள் விமானப் பயணத்திற்கு அஞ்சி பதிலாக காரில் பயணிக்கத் துவங்கினர். விளைவாக அடுத்த ஆண்டில் நெடுஞ்சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1595 வரை அதிகரித்தது. [6] தணிக்கைமேலும் தகவலுக்கு: செப்டம்பர் 11 தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொழுதுபோக்கு பட்டியல் உலக வணிக மைய இரட்டைக்கோபுரம் (அ) 9/11 தாக்குதலைப்போன்ற நிகழ்வுகளுடன் கூடிய 2001 ஆம் ஆண்டுக்கு முன் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எடிட் செய்யப்பட்டு தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டன. உதாரணமாக த சிம்ப்சனஸ் த சிட்டி ஆப் நியூயார்க் வெர்சஸ் ஹோமர் சிம்ப்சன் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதி இது உலக வணிக மையத்தை நிகழ்விடமாக கொண்டிருந்தது.[7][8] 9/11 தாக்குதலுக்குப் பிறகு க்ளியர் சேனல் கம்யூனிகேசன்ஸ் (அமெரிக்காவின் 1000 க்கும் மேற்பட்ட வானொலி நிலையங்களின் உடைமையாளர்) பொருத்தமற்ற பாடல்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டது. பாடல்கள் தடை செய்யப்படாவிடினும் வானொலி நிலையங்கள் அவற்றை ஒலிபரப்பாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டன. [9] நியூயார்க்கை அடிப்படையாகக் கொண்ட தி ஸ்ட்ரோக்ஸ் இசைக்குழு 2001 ல் வெளியிட்ட இஸ் தஸ் இட் என்ற பிரபலமான ஆல்பத்தில் ஒன்பதாவது ட்ராக் ஆக நியூயார்க் சிட்டி காப்ஸ் இருந்தது. அந்த ஆண்டில் ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் வெளியான போது இருந்த இந்த ட்ராக் (தாக்குதலின் விளைவாக) அக்டோபர் 9ல் அமெரிக்கப் பகுதியில் வெளியிடப்பட்ட போது நியூயார்க் சிட்டி காப்ஸ் நீக்கப்பட்டு வென் இட்ஸ்டார்ட்டர்ட் சேர்க்கப்பட்டது. அமெரிக்க ராக் இசைக்குழுவான ஜிம்மி ஈட் வேல்ட் தனது மூன்றாவது ஆல்பத்தின் பெயரை ப்ளீட் அமெரிக்கன் என்பதில் இருந்து சுய தணிக்கைச் செயலாக மாற்றிக் கொண்டது. பிரித்தானிய இசைக்குழுவான புஷ் ம் தங்களுடைய தனிப்பாடலின் பெயரை ஸ்பீட் கில்ஸ் என்பதில் இருந்து த பீப்பில் வி லவ் என்று மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் தங்களின் கோல்டன் ஸ்டேட் என்ற ஆல்பத்தின் ஒரு விமானம் நடுவானில் பறப்பது போன்ற கலைப்படைப்பையும் மாற்றினர். மற்றொரு பிரித்தானிய இசைக்குழுவான ஃபிடர்ன் பீஸ் பை பீஸ் என்ற பாடலின் வீடியோவும் மாற்றப்பட்டது. அசல் வீடியோ இசைக்குழுவினர் ஒரு நியூயார்க் வானளாவியில், உலக வர்த்தக மைய கட்டடத்தின் பின்னணியில் அருகில் விமானங்கள் பறக்கும் சூழலில் இசைப்பது போன்றும் பின்னர் கட்டடத்தின் ஜன்னல் வழியே இசைக் குழுவினர் குதிப்பது போன்றும் அமைக்கப்பட்டு இருந்தது. [10] மேற்கோள்கள்
Information related to 9/11 க்கு பிந்தைய காலம் |
Portal di Ensiklopedia Dunia