வியட்நாம் தொலைக்காட்சி (1966–75)
வியட்நாம் தொலைக்காட்சி (Vietnam Television, வியட்நாமியம்: Đài Truyền hình Việt Nam, சுருக்கமாக, THVN[1]), அல்லது சாய்கோன் தொலைக்காட்சி (Saigon Television) (Đài Truyền hình Sài Gòn) அல்லது அலைவரிசை 9 (Đài số 9) என்பது தென்வியட்நாமின் இரு தேசிய தொலைக்காட்சி நிலையங்களில் ஒன்றாகும். இது 1966 பிப்ரவரி 7 இல் இருந்து 1975 ஏப்பிரல் 29 இல் சாய்கோனின் வீழ்ச்சி வரை செயல்பட்டது. இது வியட்நாமின் முதல் தொலைக்காட்சி நிலையம் ஆகும்.[2] இது வியட்நாமியத் தொலைக்காட்சி(Nha Vô tuyến Truyền hình Việt Nam) வாரியத்தால் நடத்தப்பட்டது. இது வானொலி, தொலைக்காட்சித் துறையின் (Tổng cục Truyền thanh, Truyền hình và Điện ảnh) பகுதியாகும். இது பரப்புரை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டது.[3] வியட்நாம் தொலைக்காட்சி தலைநகர் சாய்கோனில் இருந்து அலைவரிசை 9 இல் 4.5;MHz) இல் செந்தர வெள்ளை-கருப்பில் ஒளிப்புகிறது.[2][4] மற்றொரு தொலைக்காட்சி நிலையம், ஆங்கிலத்தில் அமெரிக்கப் படைகளுக்காக அமைந்த NWB-TV ஆகும் இது அலைவரிசை 11 இல் இயங்கியது.[5] இரண்டு அலைவரிசைகளும் காற்றூடகத்தில் இயங்கின.
மேலும் காண்கமேற்கோள்கள்
Information related to வியட்நாம் தொலைக்காட்சி (1966–75) |
Portal di Ensiklopedia Dunia