விண்டோசு 10
விண்டோசு 10 (விண்டோஸ் 10, Windows 10; குறியீட்டுப் பெயர்: Threshold[1]) என்பது விண்டோஸ் NT இயக்க முறைமைகள் குடும்பத்தின் ஒரு பாகமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் வெளியிட்ட ஒரு இயக்கு தளம் ஆகும். இதன் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் 2014 செப்டம்பர் இல் வெளியிடப்பட்டது. முன்னணி நுகர்வோர் வெளியீடு 2015 சூலை 29ம் திகதி வெளியிடப்பட்டது. விண்டோசு 7 அல்லது விண்டோசு 8.1 இன் தகுதியுள்ள உண்மையான பதிப்புகளை முதல் ஆண்டில் இலவசமாக விண்டோசு 10 இற்கு மேம்படுத்த முடியும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது. இந்த இலவச மேம்படுத்தல் வசதி சூலை 29, 2016 அன்று (விண்டோசு 10 வெளியிட்டு சரியாக ஒரு ஆண்டுகாலத்திற்கு பின்) முடிந்தது.[2] விண்டோசு 8 இல் அறிமுகப்படுத்திய பயனர் இடைமுகம் குறைபாடுகளை கருத்திற்கொண்டு கொண்டு, தொடுதிரையற்ற சாதனங்களில் (மேசைக் கணினி, மடிக்கணினி) பயனர் அனுபவத்தை மேம்படுத்தலை குறியாகக் கொண்ட விண்டோசு 10 பற்றி ஏப்ரல் 2014 வருடாந்தக் கூட்டத்தில் முதலாவதாககக் குறிப்பிடப்பட்டது. மேலும் விண்டோசு 10 இயங்குதளம் ஒரு சேவையாக வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது. [3] முதல் மூன்று ஆண்டுகளுக்குள் 100 கோடி சாதனங்கள் Windows 10 இல் இயக்கும் என்ற Microsoft இன் கனவு நினைவாகவில்லை.[4] ஆனால் 2020 இல் அது உண்மையானது[5]. வரலாறு2011 இல் நடந்த Microsoft Worldwide Partner Conference இல் ஆண்ட்ரூலீ, மைக்ரோசாப்ட் மொபைல் தொழில்நுட்பத்தின் தலைவர் மைக்ரோசாப்ட் எல்லாச் சாதனத்திற்கு ஒரே இயங்கு தளம் உருவாக்குவோம் என்று சொன்னார். "கைபேசிக்கு ஓர் இயங்கு தளம், கணினிகளுக்கு ஓர் இயங்கு தளம், டேப்ளடுக்கு ஓர் இயங்கு தளம் என்று தனி இயங்கு தளங்களை உருவாக்க மாட்டோம். அவை அனைத்தும் ஒன்றாக வரும்." ஏப்ரல் 2014 இல் நடந்த பில்டு மாநாட்டில், டெரி மயர்சன் விண்டோஸ் 8.1 இன் ஒரு புதுப்பித்த பதிப்பை அறிமுகப்படுத்தினார். வெளியீடுகள்பொது வெளியீடுவிண்டோசு 10 பொதுப்பயன்பாட்டிற்காக சூலை 29 ஆம் தேதி கணினிகளுக்கு வெளியிடப்பட்டது. கைபேசிகளுக்கான விண்டோசு 10 கைபேசி தொகுப்பு மார்ச்சு 17 ஆம் திகதி உபயோகத்தில் உள்ள விண்டோசு 8 கைபேசிகளுக்கு (இயங்க கூடியவற்றில் மட்டும்) வெளியிடப்பட்டது. [6] உள்ளாளர்கள்இதையும் பார்க்கவும்: விண்டோஸ் இன்சைடர் விண்டோசு 10 ஐ பொதுப்பயனர்களுக்கு வெளியிடும் முன்பே பல சோதனை பதிப்புகளை உள்ளாளர்களுக்கு வெளியிட்டது. இந்த பதிப்புகளை விண்டோசு உள்ளரராக பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டது.[7] உள்ளளர்களுக்கு வேக வளையம், மெது வளையம் மற்றும் வெளியீட்டு வளையம் என மூன்று வளையங்களாக பதிப்புகள் விநியோகிக்கப்பட்டன. விண்டோஸ் 10 இன் வெளியீட்டிற்கு பிறகு, உள்ளாளர்களுக்குப் புதிய அம்ச புதுப்பிப்புகளின் முன்னோட்டங்கள் கிடைக்கின்றன. இற்றை பதிப்புகள்விண்டோசு 10 இன் முக்கிய இற்றை பதிப்பு (ஆண்டு நிறைவு இற்றை பதிப்பு) ஆகத்து 2, 2016 அன்று பொதுப்பயனர்களுக்கு வெளியிடப்பட்டது. [8] இது முதலில் ரெட்ஸ்டோன் (Redstone) என்னும் குறிப்பு பெயரால் அறியப்பட்டது. இதற்குப் பிறகு மைக்ரோசாஃப்ட் ஒவ்வொரு ஆண்டும் புதிய பதிப்புகளை வெளியிடத் தொடங்கியது.
எழுத்துருக்கள்விண்டோசு 10 மூன்று புதிய எழுத்துருக்களை அறிமுகப்படுத்தியது. இயல்புநிலை எழுத்துருக்கள்இந்த எழுத்துருக்கள் எல்லா விண்டோஸ் 10 கணினிகளிலும் நிறுவப்படுகின்றது:
மேற்கோள்கள்
Information related to விண்டோசு 10 |
Portal di Ensiklopedia Dunia