வால்வெள்ளி சூமேக்கர் –லேவி 9
வால்வெள்ளி சூமேக்கர்- லேவி 9 (முன்னைய பெயர் D/1993 F2) என்பது ஜூலை 1992 பகுதியாக உடைந்து ஜுலை 1994 வியாழனில் மோதுண்ட வால்வெள்ளி ஆகும். இதுவே,முதன்முதலில் அவதானிக்கப்பட்ட சூரியக் குடும்பம் ஒன்றுடனான வேற்றுப் பொருள் ஒன்றின் மோதுகை ஆகும்.[2] இது பல்வேறு பிரபல ஊடகங்களின் கவனிப்பைப் பெற்றதுடன் உலகளாவிய வானியலாளர்கள் பலரால் இந்நிகழ்வு நுணுக்கமாக அவதானிக்கப்பட்டது. இந்த மோதுகை வியாழன் குறித்துப் பல புதிய தகவல்களை தந்ததுடன் சூரியக் குடும்பத்தினுள் விண்வெளிக் கழிவுகள் அகற்றப்படுவதில் வியாழனின் பங்கு குறித்தும் தகவல் தந்தது. இந்த வால்வெள்ளி வானியலாளர்கலான கரோலின் மற்றும் யுஜின் எம்.சூமேக்கர், மற்றும் டேவிட் லேவி ஆகியோரால் கண்டறியப்பட்டது. சூமேக்கர்- லேவி 9 வியாழனின் ஒழுக்குகளை வலம் வரும் போது முதன் முதலில் புகைப்படம் எடுக்கப்பட்டது. இது மார்ச்சு 24, 1993 அன்று இரவு கலிபோர்னியா பலமோர் அவதானிப்பு நிலையத்திலிருந்து 46 cm (18 அங்)சிமிட் தொலைக்காட்டியால் அவதானிக்கப்பட்டது. இதுவே கோள் ஒன்றை வலம் வரும்போது முதன்முதலில் படம் பிடிக்கப்பட்ட வால்வெள்ளி ஆகும். கண்டுபிடிப்புபுவிக்கு அண்மையதான வான்போருட்களை அவதானிக்கும் செயற்பாடு ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மார்ச்சு 24, 1993 அன்று இரவு கலிபோர்னியா பலமோர் அவதானிப்பு நிலையத்திலிருந்து 46 cm (18 அங்)சிமிட் தொலைக்காட்டி மூலம் சூமேக்கர் மற்றும் லேவி ஆகியோரால் இது அவதானிக்கப்பட்டது. ஆகவே இது ஒரு தற்செயலாக கண்டுபிக்கப்பட்ட ஒன்றாக இருந்த போதிலும், அதன் முதன்மையான செயற்பாட்டிலிருந்து விரைவாக தனித்துவம் கொண்டு ஆராயப்பட்ட ஒன்றாகக் காணப்பட்டது.[3] வால்வெள்ளி சூமேக்கர்- லேவி 9 என்பது சூமேக்கர் மற்றும் லேவி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட 9 வது மீண்டும் மீண்டும் தோன்றும் (200 வருட காலத்தினுள் மீண்டு தோன்றும்)வால்வெள்ளி என்பதை குறிப்பதற்காக அதன் பெயர் அமைகின்றது. சூமேக்கர் மற்றும் லேவி ஆகியோரின் மொத்தமான 11 வது வால் வெள்ளி கண்டுபிடிப்பாக இது கூறப்படுகின்றது. மீண்டு தோன்றாத வால் வெள்ளிகள் வேறு வகையில் பெயரிடப்படுகின்றது. இக்கண்டு பிடிப்பு 1993 மார்ச்சு 27 வெளிவந்த IAU சுற்றுநிருபம் 5725 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.[4] வால்வெள்ளி சூமேக்கர்- லேவி 9யின் கண்டுபிடிப்பு படிமம் அது ஒரு அசாதாரண வால்வெள்ளி என்பதைக் காட்டுகின்றது. அதன் பல்கரு தோற்றம் மற்றும் நீட்சியாக தன்மை அதாவது அண்ணளவாக 50 வளைவுநொடி நீளமும் 10 வளைவுநொடி அகலமும். மத்திய வான் தொலைநோக்கியல் பணியக ஆய்வாளர் பிரையன் ஜி மார்ச்டேன் இந்த வால்வெள்ளி புவியிலிருந்து பார்க்கும் போது வியாழனில் இருந்து ஏறக்குறைய 4 பாகை கோணம் சரிந்திருப்பதாக தோன்றும். இது ஒளித்தேறிப்பின் விளைவு ஆயினும் இதன் வானிலான தோற்ற இயக்கம் நெருக்கமாயிருப்பதைக் காட்டுகின்றது.[4] இதிலிருந்தே சூமேக்கர் மற்றும் லேவி வியாழனின் ஈர்ப்பினால் துண்டங்களாக தோன்றிய வால் வெள்ளியை அவதானித்ததாக கருதுவார். மோதுகைக்கான எதிர்வுகூறல்கள்இக்கண்டுபிடிப்பு வானியலாளர்கள் முன்னெப்போதும் நிகழக் கண்டிராதபடி சூரியக் குடும்பத்தின் இரு முக்கிய கூறுகள் மோதுவதாய் அமைந்ததனால் வால்வெள்ளி வியாழனுடன் மோதும் நிகழ்வு பரபரப்புடன் நோக்கப்பட்டது. வால்வெள்ளி குறித்து நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன; வால்வெள்ளியின் ஒழுக்கு துல்லியமாக அறியப்பட்டன; மோதுகை நிச்சயமானது. இந்த மோதுகை அறிவியலாளர்களுக்கு வியாழனின் வளிமண்டலம் குறித்து அறியவும், மோதுகையால் அதன் முகில்களில் படைகளில் ஏற்படும் எழுகை குறித்தும் எதிரபார்க்கப்பட்டமையால் ஒரு வாய்ப்பாக அமைந்தது.[5] வால்வெள்ளியின் கட்புலனாகும் துண்டங்கள் சில நூறு மீட்டர் (ஏறக்குறைய 1,000 அடி) முதல் இரண்டு கிலோமீட்டர்கள் (1.2 mi) வரையான குறுக்களவையும் அதன் கருவின் அளவு வரையான குறுக்களவுடனும் அதாவது வால்வெள்ளி கயகுரேக்கை விட பெரிதாகவும் இது 1996 இல் புவியை இத்தகைய சிறிய வான் பொருள் இவ்வாறான பெரிய தாக்கத்தை புவியில் தோற்றுவிக்குமா அல்லது இராட்சத விண்கல் போல ஒளிர்வை மட்டும் தருமா என்பது குறித்து பெரிய விவாதமே நடந்தது.[6] மேற்கோள்கள்குறிப்புகள்
Information related to வால்வெள்ளி சூமேக்கர் –லேவி 9 |
Portal di Ensiklopedia Dunia