நெடுங்குழு 3 தனிமங்கள்
நெடுங்குழு 3 தனிமங்கள் (Group 3 elements) இசுக்காண்டியம் தொகுதி தனிமங்களாகும் . இக்குழுவில் எல்லா d-வலைக்குழுவில் இருப்பதைப்போன்றே 4 தனிமங்கள் இருக்கவேண்டிய இடத்தில் இசுக்காண்டியம் (Sc) மற்றும் யிற்றியம் (Y) என்று இரண்டு மட்டும் எப்பொழுதும் இருக்கும். மற்ற இரண்டு தனிமங்களாக லாந்த்தனம் (La) மற்றும் அக்டினியம் (Ac) அல்லது லுட்டீசியம் (Lu) மற்றும் லாரன்சியம் (Lr) இருக்கும். சிலர் லாந்தனைடு, ஆக்டினைடு என்று அதில் உள்ள 30 தனிமங்களும் இதனுள் அடக்கம் என்றும் கூறுவார். எனவே இந்த நெடுங்குளுவிர்க்கு வேதியலில் எந்த ஒரு தனி பெயரும் கிடையாது. ஆனால் லாந்தனைடு. இசுக்காண்டியம் மற்றும் யிற்றியம் ஆகிய மூன்றும் அறிய மண் உலோகம் என்று அழைக்கப்படுகிறது. நெடுங்குழு 3 உலோகங்களில் இசுக்காண்டியம், யிற்றியம் மற்றும் லாந்த்தனம் அல்லது லுட்டீசியம் ஆகிய மூன்றும் இயற்கையாக கிடைக்கின்றன. இவை அனைத்துமே வெள்ளியை ஒத்த வெள்ளை நிறத்தில் உள்ளன. அக்டினியம் அல்லது லாரன்சியம் கதிரியக்க ஓரிடத்தான்களை கொண்டுள்ளன. வேதியல் பண்புகள்எல்லா நெடுங்குழுக்களை போலவே இங்கும் எதிர்மின்னி அமைப்பில், இறுதிக் கூட்டில் எல்லா தனிமங்களும் இரண்டு எதிர்மின்னியை கொண்டுள்ளன. அனால் அதிசயக்கும் விதமாக லாரன்சியம் மட்டும் மூன்று எதிர்மின்னிகளை கொண்டுள்ளது.
இயற்பியல் பண்புகள்இசுக்காண்டியம், யிற்றியம், லாந்த்தனம் மற்றும் அக்டினியம் ஆகிய நான்கும் குறைந்த ஆக்சிசனேற்ற நிலையில் +3 அயனிகளை கொண்டுள்ளதால் இவை அறிய வாயுக்களை போன்ற பண்புகளை காட்டுகின்றன. உதாரணமாக இசுக்காண்டியம், யிற்றியம் ஆகிய இரண்டும் மென்மையான உலோகங்கள். லுட்டீசியம் மிகவும் உறுதியான உலோகம். இவற்றின் மற்ற பண்புகள் கீழே அட்டவணையில் உள்ளது.
Information related to நெடுங்குழு 3 தனிமங்கள் |
Portal di Ensiklopedia Dunia