தேசிய நெடுஞ்சாலை 3 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 3, (National Highway 3 (India)) பொதுவாக தே. நெ. 3 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். வரலாறு2010ஆம் ஆண்டில் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அனைத்துத் தேசிய நெடுஞ்சாலைகளும் மறுபெயரிடப்பட்ட பின்னர், முன்னாள் தேசிய நெடுஞ்சாலை 1 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 70 இன் சில பகுதிகள் முன்னாள் தேசிய நெடுஞ்சாலை 21-ன் சில பகுதிகளுடன் இணைக்கப்பட்டு புதிய தேசிய நெடுஞ்சாலை 3 உருவாக்கப்பட்டது.
மலைப்பாதைகள்தேசிய நெடுஞ்சாலை 3-ன் ஒரு பகுதி இமாச்சலப் பிரதேசம் மற்றும் இலடாக்கின் மேல் பகுதிகள் வழியாகச் சென்று சில உயரமான மலைப்பாதைகளைக் கடந்து செல்கிறது. முதல் பெரிய கணவாய் மணாலிக்குப் பிறகு வருகிறது. இது 3,978 மீட்டர் உயரத்தில் உள்ள ரோத்தங் கணவாய் ஆகும். ரோத்தங் கனவாய் குலு பள்ளத்தாக்குக்கும் இமாச்சலப் பிரதேசத்தின் லாஹால் மற்றும் ஸ்பிதி பள்ளத்தாக்குகளுக்கும் இடையே இணைப்பை வழங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 3-ல் அடுத்த பெரிய கணவாய் 4,890 மீட்டர் உயரத்தில் உள்ள பராலாச்சா லா ஆகும். லேஹ் மாவட்டத்தில், தே. நெ. 3 நகீ லா (4739 மீ, 15547 அடி) லாசுலுங் லா (5064 மீ, 16616 அடி) மற்றும் டாக்லாங் லா ஆகியவற்றைக் கடந்து செல்கிறது.[1] வழித்தடம்தேசிய நெடுஞ்சாலை 3 பாதை மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.
அட்டாரி, அமிருதசரசு, ஜலந்தர், ஹோஷியார்பூர்-இ. பி. எல்லை[2]
பஞ்சாப் எல்லை-காக்ரெட், அம்ப், நாதாவுன், அமீர்பூர், டௌனி தேவி, அவா தேவி, சர்க்காகாட், கோட்லி, மண்டி, குலு, மணாலி, கிராம்பூ, கெய்லோங்-சம்மு காசுமீர் எல்லை (208 கிமீ).[3][4]
இமாச்சலப் பிரதேச எல்லை-லேஹ் (170 கிமீ) [4] கட்டுமானமும் மேம்பாடும்ஜலந்தர் முதல் ஹோஷியார்பூர் வரையிலான பகுதியில் இரண்டு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்துவதற்கான செயல்முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தொடங்கப்பட்டது. இந்த 58 கி. மீ. நீளப் பகுதியில் ஆதம்பூர் மற்றும் ராமா மண்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.[5] இந்தத் திட்டத்தில் 39.4 கி.மீ. பணிகள் பஞ்சாபின் பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[6] சந்திப்புகளின் பட்டியல்
ஊடாடும் வரைபடம்![]()
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்Information related to தேசிய நெடுஞ்சாலை 3 (இந்தியா) |
Portal di Ensiklopedia Dunia