ஜிசாட்-9
ஜிசாட்-9 (GSAT-9) அல்லது தெற்காசிய செயற்கைக்கோள் என்பது ஒரு புவிநிலை தொடர்பியல் செயற்கைக்கோள் ஆகும். இதன் முக்கிய நோக்கமாக கே யூ பட்டையில் பல்வேரும் தொடர்பியல் பயன்பாடுகளை தெற்காசிய நாடுகள் முழுமைக்கும் ஏற்படுத்துதல். இது இந்தியாவின் ஜீ. எஸ். எல். வி - எப். 09 என்ற ஏlவூர்தியினால் மே 5, 2017 அன்று விண்ணில் செலுத்தப்பட்டு புவியிணக்க இடைப்பாதையில் நிறுவப்பட்டது. இது. சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.[3] ஏவூர்திஜீ. எஸ். எல். வி - எப். 09 திட்டமானது புவிநிலை ஏவு ஊர்தியின் பதினோறாவது பறப்பாகும்; மேலும் இது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கடுங்குளிர் மேலடுக்கு உடைய ஜீ. எஸ். எல். வி.யின் நான்காவது தொடர்ச்சியான ஏவுதலாகும். இந்த ஊர்தி 2-2.5 டன் நிறை உடைய செயற்கைக்கோள்களை புவியிணக்க இடைப்பாதையில் நிறுவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்பு இதற்கு முன் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட மூன்று எவூர்திகளை (GSLV-D5, GSLV-D6, GSLV-F05) ஒத்தது.[3] மேற்கோள்கள்
Information related to ஜிசாட்-9 |
Portal di Ensiklopedia Dunia