சான்யே 3
சான்யே 3 (Chang'e 3, சீனம்: 嫦娥三号; பின்யின்: Cháng'é Sānhào) சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தால், நிலவுப் பரப்புத் தேடல் திட்டத்தின் கீழ் உள்ளூர் நேரப்படி திசம்பர் 2, 2013 காலையில் (ஒ.அ.நே திசம்பர் 1) ஏவப்பட்ட நிலவு இறங்கூர்தியும் தேட்ட ஊர்தியுமாகும். இது சீனாவின் நிலவுப் பரப்புத் தேடல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் அங்கமாகும்.[4][7][8] இது சீனாவின் முதல் நிலவுப்பரப்புத் தேட்டை ஊர்தியாகும். இந்த விண்வெளிக்கலன் சீனத் தொன்மவியலின்படி நிலவுக் கடவுளின் பெயரான சான்யே என்பதைக் கொண்டிருக்கிறது. முன்னதாக சான்யே 1, சான்யே 2 சுற்றுக்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. நிலவுப் பரப்புத் தேட்டை ஊர்தியின் பெயர் யூட்டு என இடப்பட்டுள்ளது. மரகத முயல் எனப் பொருள்படும் இப்பெயர் இணைய கருத்துக்கணிப்பின்படி இடப்பட்டுள்ளது. சீனத் தொன்மவியல் கதைகளின்படி நிலவில் நிலவுக் கடவுளுக்குத் துணையாக வெள்ளை வண்ண மரகத முயல் வாழ்வதாக நம்பப்படுகிறது[9]. இது நிலவின் சுற்றுப்பாதையில் திசம்பர் 6, 2013 (உள்ளூர் நேரம்) இணைந்தது.[10] மேற்சான்றுகள்
Information related to சான்யே 3 |
Portal di Ensiklopedia Dunia