கதிரவமறைப்பு, ஏப்ரல் 9, 2043
முழு கதிரவமறைப்பு(total solar eclipse) ஏப்ரல் 9, 2043 வியாழன் அன்று நிகழும். புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்புகதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் சூரியனை விட பெரியதாக இருக்கும் போது முழு கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இது அனைத்து நேரடி சூரிய ஒளியையும் தடுக்கிறது. இந்நிலையில் நாள் முழுதும் இருளாக மாறும். முழுமையும் புவியின் மேற்பரப்பில் ஒரு குறுகிய தடத்தில் நிகழ்கிறது, பகுதிக்கதிரவமறைப்பு சுற்றியுள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தில் தெரியும். இது ஒரு முழு கதிரவமறைப்பாக இருக்கும் போது, இது ஒரு நடுவண் கதிரவமறைப்பு அல்ல ( காம்மாக்கதிர் 0.9972 அல்லது பெரியதாக இருக்கும் போது), ஆனால் இயல்பிகந்தது. மையமற்ற கதிரவமறைப்பு என்பது மொத்த மையக் கோடு புவியின் மேற்பரப்பை வெட்டாத ஒன்றாகும். மாறாக, மையக் கோடு புவியின் மேற்பரப்பிற்கு சற்று மேலே செல்கிறது.முனைப் பகுதியில் சூரிய மறைவு அல்லது சூரிய எழுச்சியின்போது முழுமையும் தெரியும் நிலையில் மட்டுமே இந்த அரிய வகை ஏற்படுகிறது. தெரியும் திறன்இது உருசியாவின் கம்சட்கா தீவகம், மகதான் ஒப்லாத்து, யாகுடியாவின் வடகிழக்கில் (உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 10 அன்று காலை) முழுமையாகத் தெரியும். இது உருசியாவின் வடகிழக்கு, கனடா, கிரீன்லாந்து, சுவால்பார்டு, ஐசுஸ்லாந்தில் முழுவதிலும் பகுதியாகத் தெரியும். அலாஸ்கா, அவாய், வடக்கு பசிபிக் உட்பட அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் இது ஓரளவு பகுதியாகத் தெரியும். முழு கதிரவமறைப்புகள் நிகழும் இடங்கள்: ஈவன்ஸ்க், ஓம்சுச்சன், பலானா, செம்சான் மற்றும் சிரியங்கா . படிமங்கள்தொடர்புடைய கதிரவமறைப்புகள்2040-2043 கதிரவமறைப்புகள்இந்தக் கதிரவமறைப்பு ஓர் அரையாண்டுத் தொடரின் பகுதியாகும். ஓரரரையாண்டுத் தொடரின் கதிரவமறைப்பு ஒவ்வொரு 177 நாட்கள் 4 மணிகளில் நிலா வட்டணையின் மாற்றுக்கணுக்களில் மீள நிகழும்.
சாரோசு 149சாரோசு 149 என்பது, ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்களில் மீள நிகழும். இதில் 71 நிகழ்வுகள் அமையும். இந்தத் தொடர் 1664, ஆகத்து 21 அன்று தொடங்கியது. இத்தொடரில் 2043, ஏப்பிரல் 9 முதல் 2331, அக்தோபர் 2 வரை முழு கதிரவமறைப்புகள நிகழும். இந்தத் தொடர் தனது71 ஆம் நிகழ்வில் பகுதிக் கதிரவமறைப்பாக 2926, செபுதம்பர்28 அன்று முடிவுறும். T இதில் மிகநெடிய முழு கதிரவ்வமறைப்பு4 மணித்துளி, 10 நொடிகளுக்கு 2205, சூலை 17 இல் நிகழும்.
மெட்டானிக் தொடர்மெட்டானிக்கத் தொடரில் கதிரவமறைப்பு19 ஆண்டுகளுக்கு(6939.69 நாட்களுக்கு) ஒருமுறை 5 சுழற்சிகள் நிகழ்கிறது. கதிரவமறைப்புகள் ஏறத்தாழ அதே நாட்காட்டி நாலின் ஏற்படுகிறது. மேலும், இதன் எண்மத் துணைத்தொடர் ஒவ்வொரு 3.8 ஆண்டுகளில்(1387.94 நாட்களில்) ஐந்தில் ஒரு பங்கு காலத்துக்கு ஒருமுறை நிகழ்கிறது.
மேற்கோள்கள்வெளி இணைப்புகள்Information related to கதிரவமறைப்பு, ஏப்ரல் 9, 2043 |
Portal di Ensiklopedia Dunia