ஆடுதுறை - 8 (நெல்)
ஏ டி டீ - 8 (ADT 8) பிரபலமாக வெள்ளை சிறுமணி (White Siruman) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, மொலகோலுக்குலு, மற்றும் ஆடுதுறை - 2 (Molagalagulu / ADT 2) என இரு நெல் வகைகளை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1] வெளியீடுதமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1930 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1] காலம்நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி / பிசாணம், மற்றும் பின் பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3] சாகுபடிநீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும், மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், தாளடிப் பருவத்தில் பிரதானமாக பயிரிடப்படும் இந்நெல் வகை, திருச்சிராப்பள்ளி மாவட்டப் பகுதிகளில் மானாவாரி சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது.[2] சிறப்புப் பண்புகள்
இவற்றையும் காண்கசான்றுகள்
Information related to ஆடுதுறை - 8 (நெல்) |
Portal di Ensiklopedia Dunia