ஃபார் கிரை 3
ஃபார் கிரை 3 (Far Cry 3) என்பது ஒரு வீடியோ விளையாட்டு ஆகும். இது யுபிசாஃப்ட் மொண்ட்ரியால் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு நவம்பர் 29 2012 இல் வெளியிடப்பட்டது. இது மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் மற்றும் பிளேஸ்டேசன் 3, எக்ஸ் பாக்ஸ் 360 போன்ற இயங்கு தளங்குகளுக்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு ஆகும். இதன் கதை இந்திய மற்றும் பசி்பிக் பெருங்கடலின் நடுவில் உள்ள பயங்கரமான கடற்கொள்ளையர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தீவில் நடக்கின்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையின் முக்கிய நடிகர் ஜேசன் ப்ராடி தமது நண்பர்களைக் கடற் கொள்ளையர்களிடமிருந்து எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே விளையாடும் ஆட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது முந்தைய வெளியீட்டான ஃபார் கிரை 2 இன் கதையிலிருந்தும் சற்றே மாற்றப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்கள், கதை மற்றும் ஆட்டம்ஃபார் கிரை 3 சில திரைப்படத்தனமான காட்சிகளுடன் ஆரம்பமாகிறது, அதன்படி முக்கிய கதாபாத்திரமான ஜேசன் ப்ராடி மற்றும் அவனது நண்பர்களும் விடுமுறையைக் கொண்டாட விமான ஓட்டியான ஜேசனின் தம்பி ரய்லியுடன் சேர்ந்து பாங்காக் செல்கிறார்கள். அங்கிருந்து சுற்றிபார்க்க அருகில் இருக்கும் தீவின் மேல் செண்டு கொண்டிருக்கும் பொழுது ஸ்கை டைவிங் செய்யத் திட்டமிடுகிறார்கள் உடனே எல்லோரும் அங்கிருந்து தீவை நோக்கி கீழே குதிக்கிறார்கள். குதித்த பிறகுதான் தெரிய வருகிறது அது கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவு என்று’ அங்கு அவர்கள் எல்லோரும் கடற்கொள்ளையர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். மேற்கோள்கள்
Information related to ஃபார் கிரை 3 |
Portal di Ensiklopedia Dunia