3-மெத்தில்-3-ஆக்டனால்
3-மெத்தில்-3-ஆக்டனால் (3-Methyl-3-octanol) C9H20O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் CH3(CH2)4C(CH3)(CH2CH3)OH என்ற அமைப்பு வாய்ப்பாடும் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐயுபிஏசி பெயரிடும் முறையில் இச்சேர்மம் 3-மெத்திலோக்டேன்-3-ஆல் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. எளிய மூன்றாம் நிலை ஆல்ககாலான இச்சேர்மம் திட்ட வெப்ப அழுத்தத்தில் நிறமற்ற நீர்மமாகவும் சுவையற்றும் காணப்படுகிறது. வறுத்த மாட்டிறைச்சியின்[2] மணத்தை 3-மெத்தில்-3-ஆக்டனால் தருவதால் உணவுத் துறையில் மணம் மற்றும் சுவையூட்டும் முகவராக பயன்படுத்தப்படுகிறது. ஆண்ட்ரோடியா காம்பரேடா வகை பூஞ்சை உயிர்வேதியியல் முறையில் 3-மெத்தில்-3-ஆக்டனால் சேர்மத்தை உற்பத்தி செய்கின்றது என அறியப்பட்டுள்ளது. மேலும் இச்சேர்மம் ஒரு நாற்தொகுதி மையமாகும். இதன் ஒவ்வொரு மாற்றியனும் வெவ்வேறு வகை மணத்தை அளிக்கின்றன.
மேற்கோள்கள்
Information related to 3-மெத்தில்-3-ஆக்டனால் |
Portal di Ensiklopedia Dunia