3-குளோரோபுரோப்பனாயிக்கு அமிலம்
3-குளோரோபுரோப்பனாயிக்கு அமிலம் (3-Chloropropanoic acid) என்பது C3H5ClO2 என்ற மூலக்கூற்று வாய்பாடைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். ClCH2CH2CO2H என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். 3-குளோரோபுரோப்பியோனிக்கு அமிலம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. வெள்ளை அல்லது நிறமற்ற திடப்பொருளாகக் காணப்படுகிறது. ஒரு மருந்தாகவும், செயற்கை இடைநிலையாகவும் பயன்படுத்தப்படுகிறது. அக்ரிலிக் அமிலத்த்தை ஐதரோகுளோரினேற்றம் செய்து 3-குளோரோபுரோப்பனாயிக்கு அமிலம் தயாரிக்கப்படுகிறது.[1] நீரிய கரைசலில், இதன் காடித்தன்மை மதிப்பு 4.08 ஆகும்.[2] 3-குளோரோபுரோப்பனாயிக்கு அமிலம் அறிவியல் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது. கட்டமைப்பு ரீதியாக காமா -ஐதராக்சி பியூட்டைரிக்கு அமிலத்துடன் தொடர்புடையது மற்றும் காமா -ஐதராக்சி பியூட்டைரிக்கு அமில ஏற்பியுடன் பிணைக்கிறது. ஆனால் காமா அமினோபியூட்டைரிக்கு அமிலத்துடன் எந்தவித தொடர்பும் கொண்டிருக்கவில்லை.[3] சில களைக்கொல்லி கலவைகளில் இது ஒரு செயலில் உள்ள பொருளாகவும் உள்ளது.[4] அதிகப்படியான அளவு எடுத்துக் கொண்டால் மயக்கம் மற்றும் வலிப்பு ஏற்படலாம்.[5] நுண்ணுயிரேற்றம் வழிமுறையாக பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகிய இரண்டாலும் 3-குளோரோபுரோப்பனாயிக்கு அமிலத்தை உடைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.[6][4] மேற்கோள்கள்
Information related to 3-குளோரோபுரோப்பனாயிக்கு அமிலம் |
Portal di Ensiklopedia Dunia