3-ஐதராக்சிபியூட்டேனால்
3-ஐதராக்சிபியூட்டேனால் (3-Hydroxybutanal) என்பது (CH3CH(OH)CH2CHO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டால்டால், ஆல்டால் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. H3C−CH(OH)−CH2−CH=O என்ற கட்டமைப்பு வாய்ப்பாடு இதை அடையாளப்படுத்துகிறது. ஓர் ஆல்டால் (R−CH(OH)−CHR'−C(=O)−R") சேர்மம் என இது வகைப்படுத்தப்படுகிறது. மேலும் "ஆல்டால்" என்ற சொல் குறிப்பாக 3-ஐதராக்சிபியூட்டேனால் சேர்மத்தைக் குறிக்கும். இது முறையாக அசிடால்டிகைடின் (CH3CHO) இருபடியாதல் விளைபொருளாகும். அடர்த்தியான நிறமற்ற அல்லது வெளிர்-மஞ்சள் திரவமான இது, பல்வேறு தாக்கங்களைக் கொண்ட பல்துறை மற்றும் மதிப்புமிக்க இடைநிலையாகும். [2] இந்த சேர்மத்தில் நாற்தொகுதி மையம் உள்ளது. இருப்பினும் இந்த அம்சம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. இச்சேர்மம் முற்காலத்தில் தூக்க மருந்தாகவும் மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது [2]. தயாரிப்புநீர்த்த சோடியம் ஐதராக்சைடுடன் வினைபுரியும்போது அசிட்டால்டிகைடு இருபடியாக்கப்படுகிறது.:[3]
இது ஒரு முன்மாதிரி ஆல்டால் வினையாகும் வினைகள்3-ஐதராக்சியூட்டேனாலின் நீரிழப்பு வினை குரோட்டோனால்டிகைடை அளிக்கிறது. 3-ஐதராக்சியூட்டேனாலின் வடிகட்டுதல் இந்த மாற்றத்தை ஏற்படுத்த போதுமான அளவு கட்டாயப்படுத்துகிறது.:[3]
3-ஐதராக்சிபியூட்டேனாலை ஐதரசனேற்றம் செய்தால் 1,3-பியூட்டேன் டையால் கிடைக்கிறது:
இந்த டையால் 1,3-பியூட்டாடையீனின் முன்னோடியாகும், இது பல்வேறு பலபடிகளுக்கு முன்னோடியாகும். தன்னிச்சையாகவும் 3-ஐதராக்சிபியூட்டேனால் பலாபடியாக்கம் அடைகிறது. ஆனால் தண்ணீரைச் சேர்ப்பதன் மூலம் அதை நிறுத்தலாம். பயன்ஆல்டால் வாசனை திரவியங்கள் தயாரிப்பதிலும், நுரை மிதப்பு முறையில் தாதுவை தூய்மையாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.[4] இதையும் காண்கமேற்கோள்கள்
Information related to 3-ஐதராக்சிபியூட்டேனால் |
Portal di Ensiklopedia Dunia