3-அமினோபென்சமைடு
3-அமினோபென்சமைடு (3-Aminobenzamide) என்பது C7H8N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரை வெண்மை நிறத்தில் தூளாகக் காணப்படும் இச்சேர்ம்ம் ஒரு பென்சமைடு ஆகும். தயாரிப்பு3-நைட்ரோபென்சமைடை வினையூக்க ஐதரசனேற்றத்தின் வழியாக ஒடுக்கம் செய்து 3-அமினோபென்சமைடைத் தயாரிக்கலாம்[1]. பயன்கள்டி.என்.ஏ பழுதாக்கல், படியெடுத்தல் கட்டுப்பாடு, திட்டமிட்ட செல் இறப்பு ஆகிய செயல்முறைகளுக்கு காரண நொதியான பாலி ஏ.டி.பி. ரைபோசு பாலிமெரேசை 3-அமினோபென்சமைடு தடுக்கிறது. பாலி ஏ.டி.பி. ரைபோசு பாலிமெரேசு செயலூக்கப்பட்டவுடன் அது உடனடியாக செல்லிலுள்ள நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடைடி.என்.ஏ வை பழுதுபார்க்கப் பயன்படுத்திக் கொள்கிறது. குறைந்த அளவு நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு+ செல்லிலுள்ள அடினோசைன் டிரை பாசுப்பேட்டின் அளவைக் குறைக்கிறது. இதனால் செல்லிறப்பு நிகழ்கிறது [2]. 3-அமினோபென்சமைடின் கட்டமைப்பு நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு+ இன் கட்டமைப்பை ஒத்திருக்கிறது. எனவே இது பாலி ஏ.டி.பி. ரைபோசு பாலிமெரேசுடன் பிணைந்து நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு+ பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கிறது. பாலி ஏ.டி.பி. ரைபோசு பாலிமெரேசு பெரும்பாலும் புற்றுநோய் சிகிச்சைக்கு இலக்காக்க் கருதப்படுவதால் 3-அமினோபென்சமைடும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது[3]. மேற்கோள்கள்
Information related to 3-அமினோபென்சமைடு |
Portal di Ensiklopedia Dunia