3-அமினோபீனால்
3-அமினோபீனால் (3- Aminophenol) என்பது C6H4(NH2)(OH) என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஓர் அரோமாட்டிக் அமீன் மற்றும் அரோமாட்டிக் ஆல்ககால் என்று வகைப்படுத்தப்படுகிறது. 2-அமினோபீனால் மற்றும் 4-அமினோபீனால் சேர்மங்களின் மெட்டா நிலை மாற்றியன் 3-அமினோபீனால் ஆகும். தயாரிப்பு3- அமினோபென்சீன்சல்பானிக் அமிலத்தை எரிகார இணைப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் 3-அமினோபீனால் தயாரிக்க முடியும். எரிகார இணைப்பு வினை என்பது சோடியம் ஐதராக்சைடுடன் வினைபடு பொருளைச் சேர்த்து 245 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு 6 மணி நேரம் சூடுபடுத்தும் வினையாகும்[2]. இரிசோர்சினால் உடன் அமோனியம் ஐதராக்சைடு சேர்த்து பதிலீட்டு வினைக்கு உட்படுத்துவதன் மூலமாகவும் 3-அமினோபீனால் தயாரிக்க முடியும்[3]. பயன்கள்தொகுப்பு முறையில் 3-(டையெத்திலமினோ)பீனால் தயாரிக்கப் பயன்படுவது, இச்சேர்மத்தோடு மிகவும் தொடர்புடைய பயன்பாடுகளில் ஒன்று ஆகும். பல ஒளிரும் சாயங்கள் (எ.கா உரோடமைன் பி) தயாரித்தலில் 3-அமினோபீனால் ஒரு முக்கியமான இடைநிலையாக உள்ளது. தலைமுடிச் சாய நிறங்கள், குளோரின் கலந்த வெப்பநெகிழிகளை நிலைநிறுத்துதல் உள்ளிட்டவை பிற பயன்பாடுகளில் அடங்கும்[2] மேற்கோள்கள்
Information related to 3-அமினோபீனால் |
Portal di Ensiklopedia Dunia