3-அமினோபிரிடின்
3-அமினோபிரிடின் (3-Aminopyridine) என்பது C5H6N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். அமினோபிரிடின் சேர்மத்தின் மூன்று மாற்றியன்களில் 3-அமினோபிரிடினும் ஒன்றாகும். நிறமற்ற திண்மப் பொருளாக இது காணப்படுகிறது. தயாரிப்புநிகோடினமைடுடன் சோடியம் ஐப்போபுரோமைட்டை சேர்த்து சூடாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இவ்வினைக்காக சோடியம் ஐதராக்சைடுடன் புரோமினை சேர்த்து 70 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து தளத்திலேயே சோடியம் ஐப்போபுரோமைட்டு தயாரிக்கப்படவேண்டும்.[1] கரிம ஈந்தணைவியான 3-பிரிடைல் நிக்கோடினமைடு தயாரிப்புக்கு 3-அமினோபிரிடின் பயன்படுத்தப்படுகிறது. தொகுப்பில் பயன்படுத்தப்படலாம். திராக்சிபைடு என்ற மருந்து தயாரிப்பிலும் 3-அமினோபிரிடின் பயன்படுத்தப்படுகிறது. நச்சுத் தன்மைகாடைகளுக்கு வாய்வழியாக கொடுக்கும் போது 3-அமினோபிரிடின் சேர்மத்தின் உயிர் கொல்லும் அளவு ஒரு கிலோகிராமுக்கு 178 மில்லிகிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.[2] மேற்கோள்கள்
Information related to 3-அமினோபிரிடின் |
Portal di Ensiklopedia Dunia