பிஎஸ்என்எல்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல் BSNL ) என்பது இந்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் ஒரு பகுதியான தொலைத்தொடர்புத் துறையின் கீழ் செயல்படும் ஓர் இந்திய ஒன்றியப் பொதுத்துறை நிறுவனமாகும். பொதுத்துறை நிறுவனம் அக்டோபர் 1,2000- இல் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். அவர் இந்தியக் குடிமைப் பணியின் சேவைக் குழு 'ஏ' அரசிதழ்ப் பதிவு பெற்ற அலுவலராகவோ அல்லது இந்திய தொலைத்தொடர்பு நிதி சேவையின் ஒன்றியத் தொலைத் தொடர்புக் குழுவின் ஏ' அரசிதழ்ப் பதிவு பெற்ற அலுவலராகவோ இருப்பார். இந்த நிறுவனம், இந்தியா முழுவதும் நாடு தழுவிய தொலைத்தொடர்பு வலையமைப்பு மூலம் குரல் அழைப்பு மற்றும் இணையச் சேவைகளை வழங்குகிறது. இது இந்தியாவிலேயே அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவை வழங்குநராகும்.[6] வரலாறு![]() பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் -இன் வரலாறானது பிரித்தானிய இந்தியாவிலிருந்து தொடர்கிறது. இந்தியாவில் தொலைத்தொடர்பு வலையமைப்பின் அடித்தளம் 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. பிரித்தானியர் காலத்தில், கொல்கத்தாவிற்கும் டயமண்ட் துறைமுகத்திற்கும் இடையில் முதல் தந்திப் பாதை 1850 -இல் நிறுவப்பட்டது. பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி 1851 ஆம் ஆண்டில் தந்தி வசதியினைப் பயன்படுத்தத் தொடங்கியது, 1854 வரை நாடு முழுவதும் தந்தி இணைப்புகள் அமைக்கப்பட்டன. 1854 ஆம் ஆண்டில், தந்திச் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. முதல் தந்திச் சேவை மும்பையிலிருந்து புனேவுக்கு அனுப்பப்பட்டது. 1885 ஆம் ஆண்டில், இந்திய டெலிகிராப் சட்டம் பிரிட்டிஷ் இம்பீரியல் சட்டமன்றக் குழுவால் நிறைவேற்றப்பட்டது. 1980களில் தபால் மற்றும் டெலிகிராப் துறை இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, தொலைத்தொடர்புத் துறை உருவாக்கப்பட்டது இறுதியில் அரசுக்குச் சொந்தமான தந்தி மற்றும் தொலைபேசி நிறுவனத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது, இது பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிறுவ வழிவகுத்தது.[7] 2000களின் முற்பகுதி வரை, பிஎஸ்என்எல் மட்டுமே இந்திய ரயில்வேக்கான ஒரே சேவை வழங்குநராக இருந்தது, பின்னர் அவை ரெயில்டெல் என பிரிக்கப்பட்டன. தயாரிப்புகள் மற்றும் சேவைகள்தரைவழித் தொலைபேசி மற்றும் நகர்பேசிபிஎஸ்என்எல் ஜிஎஸ்எம் இயங்குதளத்தில் தரைவழித் தொலைபேசி மற்றும் மொபைல் தொலைபேசி எனும் இரண்டு சேவைகளையும் வழங்குகிறது. நகர்பேசிபிஎஸ்என்எல் மொபைல் என்பது இந்தியா முழுவதும் செல்ஒன் மற்றும் பிஎஸ்என்எல் எனும் பெயர்களில் ஜிஎஸ்எம் வலையமைப்புச் சேவைகளை வழங்கும் ஒரு முக்கிய நிறுவனமாகும். இது இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பரவலான இணைய அனுகலைக் கொண்டுள்ளது. இது இந்தியா முழுவதும் 121.82 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.[8] தரைவழித் தொலைபேசிபிஎஸ்என்எல் - இன் தரைவழித் தொலைபேசி 1990- களின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் தொலைத்தொடர்புத் துறை புதிய தொலைத்தொடர்புக் கொள்கை அறிவிக்கப்படுவதற்கு முன்பு முழு நாட்டிற்கும் இது ஒரே நிலையான தொலைபேசிச் சேவையாக இருந்தது. அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் மட்டுமே நாட்டில் செப்பு கம்பி மூலம் தரைவழியாகத் தொலைபேசிச் சேவைகளை வழங்க அனுமதிக்கப்பட்டன. பிஎஸ்என்எல் லேண்ட்லைன் இந்தியாவின் மிகப்பெரிய நிலையான தொலைபேசி ஆகும். இது பிப்ரவரி 28,2021 நிலவரப்படி நாட்டில் 95 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் 47.20% சந்தைப் பங்கையும் கொண்டுள்ளது.[9] இணையம்இணையச் சேவையினை வழங்குநர்களில் இந்திய அளவில் பிஎஸ்என்எல் நான்காவது இடம் வகுக்கிறது, இது நாடு முழுவதும் உள்ளது. நாட்டின் நான்கு சேவை வழங்குநர்களில் சுமார் 7.5 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய ஃபயர்பேஸ் தொலைத் தொடர்பு வலையமைப்பையும் இது கொண்டுள்ளது.[10] அகண்ட அலைவரிசைபிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை எம்பிஎல்எஸ், பி2பி மற்றும் இணைய குத்தகை இணைப்புகள் உள்ளிட்ட நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்புச் சேவைகளை வழங்குகிறது. இது சிடிஎம்ஏ தொழில்நுட்பம் மற்றும் அதன் சொந்த விரிவான ஒளியியல் இழை செய்தித் தொடர்பினைப் பயன்படுத்தி நிலையான-வரிச் சேவைகள் மற்றும் தரைவழித் தொலைபேசி ஆகிய வசதிகளை வழங்குகிறது. அழைப்புவழி இணையமுறை மூலம் முற்கொடுப்பனவு , நெட்ஒன் பின்கொடுப்பனவு, டேட்டாஒன் பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை மூலம் பிஎஸ்என்எல் இணைய அணுகல் சேவைகளை வழங்குகிறது.[11][12] இதனையும் காண்ககுறிப்புகள்
புற இணைப்புகள்
Information related to பிஎஸ்என்எல் |
Portal di Ensiklopedia Dunia